sekarkavithai

தோழி

Posted on: ஜனவரி 30, 2012

தோழி
தோழி

உன்னோடு நானிருந்த காலம்
கோடையிலும் ஓர் வசந்தம்
பாலையிலும் ஓர் சோலைவனம்
பருவமடையா வயதில்
ரெட்டை ஜடையுடன்
கைகோர்த்து நடந்தது
ஒருகை இலந்தைப்பழத்தை
இருகைகள் பகிர்ந்துண்டது
டியூசன் வகுப்புகளுக்கு
துணையாய் வந்தது
யாரோ உன்னையடிக்க
எனக்கு கோபம்வந்தது

விடுமுறை நாட்களில் வந்த
இழந்தது போன்ற உணர்வு
அண்ணணை சாக்காய் வைத்து
உன்னைப் பார்த்தது
நட்பையும் தாண்டிய
நாகரீகப் பேச்சுகள்
இடையறாத பேச்சுக்களின்
நடுவே நீ காட்டும் மெளனம்
எல்லை தாண்டியபோதும்
நட்பாய் ஏற்றுக்கொண்டது

இவைகளை நினைத்தால்
இமைகளும் வலிக்கினறன
உடல்கள் நடுங்குகின்றன
கண்கள் குளமாகின்றன
ஆயிரம் வசந்தம்
ஆயிரம் கோடை
கடந்து விட்டேன்
நீயிட்ட கோலமட்டும்
மனதில் பசுமையாய்
நிழலாடுகிறது தோழி
உன் சுவடுகள் என் நெஞ்சில்
அதை ஒவ்வொருநாளும்
படிக்கிறேன் அழுகிறேன்

17 பதில்கள் to "தோழி"

ஆயிரம் வசந்தம்ஆயிரம் கோடைகடந்து விட்டேன்அருமையான வரிகள்

கடந்த கால வசந்த நினைவுகள் அருமை !

தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

இளமைக் கோலங்கள் மறக்க முடியாதவைதான்.அருமை சகோ.வாழ்த்துக்கள். இன்னும் முயற்சி பண்ணுங்க. அருமையான கவிதைகள் உங்களிடமிருந்து வெளிவரும். வாழ்த்துக்கள்.

தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

நினைவும் படிமங்கள் வார்த்தைகளாய்.மனப்பாரம் கொஞ்சம் குறைந்திருக்கும் சகோதரன் !

தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

மலரும் நினைவுகளோ – வாழ்த்துக்கள்

தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

வாழ்க்கையின் இழப்புகளில் இது போன்றவைகள் தான் இன்னும் ரணங்களை கூட்டும் ..உங்களின் வரிகளில் தெரிகின்றது அனுபவிக்கும் வேதனை ..சுழலும் காலத்தில் நாம் சுமந்து நிற்கும் இந்த பசுமையான நினைவுகள் மட்டுமே மருந்தாக ..அழகிய படைப்புக்கு வாழ்த்துக்கள் தோழரே

தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

மாப்ள மச்சான்கள் தான், true friends–னு சொல்லித்திரிபவர்களின் மத்தியில், தோழியைப் பற்றிய இக்கவிதை அழகு..!:):)

தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

பின்னூட்டமொன்றை இடுக

Top Rated

Blog Stats

  • 17,623 hits

அதிகளவு சொடுக்குகள்

  • எதுவுமில்லை

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 5 other subscribers